காவி வேஷ்டியில் வந்த கேப்டன் நினைவு –பிரேமலதா விஜயகாந்த்

0பார்த்தது
காவி வேஷ்டியில் வந்த கேப்டன் நினைவு –பிரேமலதா விஜயகாந்த்
மானாமதுரை தேவர் சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். வரவிருக்கும் தேர்தல் முக்கியமானது என்றும், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மணல், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது போல், இப்போது வாக்குகளும் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், மக்களை இந்தத் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ, அந்தக் கூட்டணியே வெற்றி பெற்று, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.