சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சம்பராயனேந்தல் பகுதியைச் சேர்ந்த அழகுமலை (50) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஸ்டீல் பிட்டராக வேலை செய்து வந்தார். அங்கு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணம் குறித்த முழுமையான தகவல்கள் குடும்பத்தினருக்குக் கிடைக்கவில்லை. இதனால், அழகுமலையின் மனைவி, தனது கணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.