திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் சாலை மறியல்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய்க்கு நீர்வரத்து வழங்கும் வைகை ஆறு கால்வாயின் குறுக்கே பாலம் கட்டி மணல் எடுக்க முயற்சி நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி சுங்கச்சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கால்வாயின் குறுக்கே நடைபெறும் பாலம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி