சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சீனியப்பா திரையரங்கில் காலாவதியான சிப்ஸ் மற்றும் கெட்டுப்போன ஐஸ்கிரீம் பவுடர்கள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 17 கிலோ கெட்டுப்போன ஐஸ்கிரீம் பவுடர்கள் மற்றும் காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, திரையரங்கில் செயல்பட்டு வந்த கடைக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.