மணல் தேக்கம் -பெண்கள் களமிறங்கியதால் சீரான போக்குவரத்து

2பார்த்தது
மானாமதுரை அருகே பரமக்குடி–மானாமதுரை நெடுஞ்சாலையில், வாகன வேகத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த பேரிகாட் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து மணல் சாலையில் பெருமளவில் தேங்கியது. பேரிகாட் அகற்றப்பட்டதும், சாலை முழுவதும் பரவிய மணலால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து சாலையில் தேங்கியிருந்த மணல்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அவர்களின் தன்னார்வ செயல் பாராட்டுக்களைப் பெற்றதுடன், அதிகாரிகள் மீண்டும் வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி