கீழடியில் செல்பி பாயிண்ட், தொல்லியல் துறை நடவடிக்கை

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய, மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்கள் 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்க உள்ளார். 67,343 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தின் முன், சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுக்க வசதியாக 'கீழடி நம் தாய்மடி' என்ற பெயரில் தென்னங்கன்றுடன் செல்பி பாயிண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. வைகை நதிக்கரையோரப் பகுதிகளில் தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுவதால், செல்பி பாயிண்ட்டில் தென்னை மரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி