ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்

225பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலயத்தில் சனி மகா பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, சோமநாத சுவாமிக்கும் நந்தி தேவனுக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் "ஓம் நமசிவாய" மந்திரம் ஓதி நந்தி பகவானை சுற்றி பிரதட்சிணம் செய்து வழிபட்டனர். சனி மகா பிரதோஷம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி நலன்கள் பெருகும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆன்மிக விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி