சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில், சர்தார் வல்லபபாய் படேலின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ‘தேசிய ஒற்றுமைப் பாதயாத்திரை – யூனிட்டி மார்ச்’ நடைபெற்றது. இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி கொடியசைத்து துவக்கி சிறப்புரையாற்றினார். தேச ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கான பள்ளி–கல்லூரி மாணவர்கள், இளைஞர் நலத் தொண்டர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியும், தொனிமொழிகள் எழுதிய பலகைகளும் ஏந்தி பங்கேற்றனர். அரண்மனை பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம், தொண்டி சாலை, அரசு பேருந்து பணிமனை வழியாகச் சென்று நிறைவுற்றது.