சிறப்பு கல்வி கடன் முகாம் - ₹72. 64 லட்சம் கடன் உதவி வழங்கல்

277பார்த்தது
சிறப்பு கல்வி கடன் முகாம் - ₹72. 64 லட்சம் கடன் உதவி வழங்கல்
சிவகங்கை மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் ஜெஃபி கிரேசியா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. அனிஷ் குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவின் குமார் ஆகியோர் முன்னிலையில், 23.02.2026 அன்று பண்ணை மாரிமுத்து மருந்தியல் கல்லூரி அரங்கில் மூன்றாம் கட்ட சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 180-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் பங்கேற்றன. முகாமின் ஒரு பகுதியாக, 9 மாணவர்களுக்கு ₹72.64 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you