சிறப்பு மருத்துவ முகாம் - ஆட்சியர் தகவல்

212பார்த்தது
சிறப்பு மருத்துவ முகாம் - ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று (10. 2. 2026) மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், எஸ். புதூர் வட்டாரத்திற்குட்பட்ட உலகம்பட்டி நா. சுப. ராம. ராமநாதன் செட்டியார் – கல்யாணி ஆச்சி திருமண மண்டபத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு ரூபாய் 3,000 மதிப்புள்ள இரத்த பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடல்நலத்தை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி