அய்யனார்–காளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள T. கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள களதி உடைய அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டது. அய்யனார் மற்றும் காளியம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நெய்விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, மலர் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். கோவில் வளாகம் முழுவதும் பக்திப் பாடல்கள் ஒலித்ததோடு, ஆன்மிக சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி