சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பான்குளம் இந்திரா நகர் பகுதியில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. சேதமடைந்த மின்கம்பங்கள் தற்காலிகமாக கட்டி வைக்கப்பட்டுள்ளதால், அவை முறிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், மின் கட்டணத்தை தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கும் மின்வாரியத் துறையினர், இதுபோன்ற ஆபத்தான மின் வயர்களை பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.