தங்கத் தேர் இழுத்து அன்னதானம் வழங்கிய தவெகவினர்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில், தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு, திருப்புவனம் கிழக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ப. திவாகர் மற்றும் கிளைச் செயலாளர் P. முத்துச்சாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், மடப்புரம் அய்யனார் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் S. முத்துபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி