மேனேஜர் பதவி கலெக்டர் பதவி அல்ல காரசார விவாதம்

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சி மேலாளர் தனிப்பட்ட முறையில் செயல்படுவதாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட கோப்புகளை தனியாக வைத்திருப்பதாகவும் ஏழாவது வார்டு உறுப்பினர் மாரிக்கண்ணன் கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால் கூட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. மேலும், மானாமதுரையில் அதிகரித்து வரும் கொசு தொல்லை குறித்தும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். கொசு மருந்து தெளிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும், கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மருந்து தெளிக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர், அனைத்து வார்டுகளிலும் முறையாக கொசு மருந்து தெளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி