மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டப்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பும்போது, திருப்புவனம் அருகே சக்குடி பகுதியில் எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் மோதியதில் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்யா, அஷ்வின் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.