சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள டி. புதுக்கோட்டை, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று மதியம் முதல் பலத்த சாரல் மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, அப்பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது.