சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள், தங்களுக்கு நிரந்தரமாக அரசு வீடு கட்டித்தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்துள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வீடு தர மறுத்து புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்துள்ள அவர்கள், தமிழக அரசு வீடு கட்டித்தரவும், சுயதொழில் செய்ய வங்கி மூலம் உதவிகள் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.