சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மற்றும் இளையான்குடி காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்கு தொடர்புடைய மனீஷ் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி உத்தரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவப்பிரசாத் அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.