சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிப்காட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளருக்கு மணல் திருட்டு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் சந்திப்பு பகுதியில் சோதனை மேற்கொண்டு உள்ளனர். அந்த சோதனையில் தீ. வேளாங்குளம் பகுதியைச் சேர்ந்த கிரி (50) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகுமாரி (48) ஆகிய இரண்டு பேரும் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.