மானாமதுரை அருகே புலிப்பாண்டி (25), கொலை வழக்கில் ஜாமீனில் இருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிய அவரை அழைத்துச் சென்ற இரு போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தப்பியோடிய புலிப்பாண்டி நேற்று சிவகங்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.