தனியார் இடத்தில் மணல் கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்

1பார்த்தது
தனியார் இடத்தில் மணல் கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்
இளையான்குடி அருகே முனைவென்றி பகுதியில் தனியார் இடத்தில் இருந்து 2 லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுமார் இரண்டரை யூனிட் மணல் மற்றும் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி