சிவகங்கை: கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது; ஆட்சியர் தகவல்

64பார்த்தது
சிவகங்கை: கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது; ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, 10.2.2026 அன்று மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனால், நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (10.2.2026) மற்றும் புதன்கிழமை (11.2.2026) ஆகிய இரு தினங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் தடைபடும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you