இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, 4.11.2025 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 17.2.2026 அன்று இறுதிப் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, வருகின்ற 23.2.2026 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.