சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பிசர்பட்டணம் பகுதியில் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சிவகங்கை அருகே ஒக்கூர் பகுதியில் சபரி ராஜ் என்பவருக்கு சொந்தமான நெல் வயலிலும் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இரவு நேரங்களில் கூட்டமாக வரும் பன்றிகளால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மின்சார வேலி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு கூடுதல் செலவாகிறது. மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.