சிவகங்கை: விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்

83பார்த்தது
சிவகங்கை: விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கென 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 21 பள்ளி மாணவர்கள் விடுதிகள், 14 பள்ளி மாணவிகள் விடுதிகள், 5 கல்லூரி மாணவர்கள் விடுதிகள், 5 கல்லூரி மாணவிகள் விடுதிகள் ஆகும். பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்து அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் வாயிலாக இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளைப் பொருத்த வரை வருகிற 18.6.2025-க்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளைப் பொருத்த வரை வருகிற 15.7.2025-க்குள்ளாகவும் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இந்தச் சலுகைகளைப் பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி