சிவகங்கை: மக்களை அச்சுறுத்தியதாக இளைஞர் மீது வழக்கு

71பார்த்தது
சிவகங்கை: மக்களை அச்சுறுத்தியதாக இளைஞர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கலையரசு. இவர் செல்லப்பனேந்தல் பேருந்து நிறுத்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வடகரை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அருள் பாண்டி என்ற ஒண்டி பாண்டி (22) என்ற இளைஞர் கையில் வாளுடன் சுற்றித்திரிந்துள்ளார். அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி