வீரப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமி மாயம் – போலீசார் விசாரணை

1பார்த்தது
வீரப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமி மாயம் – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம், வீரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.சிறுவயல் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் தேடியும் கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி