சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிலம்பரசன் மற்றும் ரஞ்சித் என்ற மண்டை ரஞ்சித் ஆகிய இருவரை மானாமதுரை மற்றும் திருப்பாச்சேத்தி போலீஸார் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி உத்தரவின் பேரில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இருவரையும் போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.