உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி

2பார்த்தது
உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 1993 பேட்ஜ் காவலர்கள், பணியில் உயிரிழந்த தங்கள் சக காவலர் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) திரு. ராஜேந்திரன் அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோதே உயிரிழந்த ராஜேந்திரனின் குடும்பத்திற்கு, அவருடன் 1993 ஆம் ஆண்டு காவல்துறையில் இணைந்த சக ஊழியர்கள் நிதி திரட்டி இந்த உதவியை செய்துள்ளனர். “காக்கும் கரங்கள்” என்ற குழுவாக செயல்படும் இவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் நிதி வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9 காவலர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 45 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி