சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய்க்கு செல்லும் வைகை ஆற்றின் கால்வாயில் தனிநபர் பாலம் கட்டும் பணி, நீர்வளத் துறை அனுமதியுடன் தொடங்கப்பட்டது. ஆவரங்காடு கிராமத்தினர் இதை எதிர்த்து தகராறு செய்ததால், திருப்புவனம் போலீசார் தலையிட்டு பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி, 9 பேரை கைது செய்தனர்.