அனைவரும் மகிழும் பட்ஜெட் நாளை -அமைச்சர் பேட்டி

311பார்த்தது
சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம், மத்திய அரசின் தடைகளை மீறி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ராணுவத்தின் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடவடிக்கை போல துல்லியமாக செயல்படுத்தப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கூறினார். நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் இருக்கும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை குழுவில் இல்லாததால் தகவல் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி