பணத்தை தராமல் இழுத்தடித்த நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு

1பார்த்தது
பணத்தை தராமல் இழுத்தடித்த நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு
சிவகங்கை சிபி காலனியைச் சேர்ந்த சமயமுத்து, தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் 20 மாதங்களுக்கு மாதம் ரூ. 1.25 லட்சம் செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். கொரோனா தொற்றால் தவணை செலுத்த முடியாத நிலையில், செலுத்திய பணத்தை நிர்வாகச் செலவு 5% கழித்து திரும்பக் கேட்டார். பணத்தை வழங்க இழுத்தடித்த நிறுவனத்திற்கு எதிராக சமயமுத்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், சமயமுத்து செலுத்திய தொகையில் 5% நிர்வாகச் செலவு கழித்து மீதித் தொகையான ரூ. 1,18,750-ஐ ஒரு மாதத்திற்குள் வழங்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ. 20,000 கூடுதலாக வழங்கவும் சிட்பண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி