சிவகங்கை மாவட்டம், பெரிய கோட்டையில் உள்ள Q–711 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி 2017ல் ஓய்வு பெற்ற கருப்பன் மகன் மாரிமுத்து, கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் பிற பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மதுரை தொழிலாளர் நீதிமன்றம் பணிக்கொடை வழங்க உத்தரவிட்டும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.