சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 8 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ, ராகினிப்பட்டி பைபாஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் ஈஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.