சிவகங்கை மாவட்டம் அனுமந்தகுடி பகுதியில் கடையின் பூட்டை உடைத்து இரும்புக்கம்பிகளை திருட முயன்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனபாலன் என்பவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிராக்டரில் ஏற்றப்பட்டிருந்த சுமார் 2.5 டன் இரும்புக்கம்பிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அனுமந்தகுடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.