பாஜக மாவட்டதுணை தலைவரின் கணவருக்கு கத்தி குத்து

5பார்த்தது
சிவகங்கை அருகே மேலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த தக்காளி வியாபாரி சந்தோஷ், சோழா பைனான்ஸ் நிறுவனத்தில் எடுத்த வாகனத்திற்கான தவணைகளை செலுத்தாததால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த சந்தோஷ், கத்தியுடன் நிதி நிறுவன அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கு பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்ட பாஜக துணைத் தலைவர் சுகனேஸ்வரியின் கணவர் விஜயகுமாரை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி