மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் புகுந்து கண்ணாடி உடைப்பு

4பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், இரவு காவலர் செல்லத்தின் மகன் அஜித், மது அருந்த பணம் கேட்டு தந்தையைத் தேடி வந்துள்ளார். தந்தை இல்லாததால் ஆத்திரமடைந்த அஜித், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகள் பயன்படுத்தும் போலிரோ வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஜித் தான் வாகனங்களை உடைத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளி அலுவலர் பாலகிருஷ்ணன் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி