மாட்டு வண்டி பந்தயம் -73 ஜோடி மாடுகள் பங்கேற்பு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பூவாளி கிராமத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஊத்திக்குளம் முதல் பூவாளி வரை நடந்த இந்தப் பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 73 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இந்தப் பந்தயம் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது: 7 கிமீ பெரிய மாடு பிரிவில் 18 ஜோடி, 5 கிமீ சிறிய மாடு பிரிவில் 38 ஜோடி, 4 கிமீ பூஞ்சிட்டு மாடு பிரிவில் 17 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் திரளாக பங்கேற்று பந்தயத்தை கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி