கார் தீ விபத்து: உடல் கருகி ஒருவர் உயிரிழப்பு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ராமலிங்கபுரம் விளக்கு பகுதியில் விபத்துக்குள்ளான இண்டிகா கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில், காருக்குள் சிக்கியிருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், தீயணைப்பு துறையினருக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. உயிரிழந்தவர் யார், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து மதகுபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி