சிவகங்கை: அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்; ஐந்து பேர் மீது வழக்கு

75பார்த்தது
சிவகங்கை: அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்; ஐந்து பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில், அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக ஐந்து பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சோமநாதமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி அளித்த புகாரின் பேரில், காளையார் கோவில் காவல் நிலைய உதவி சார்பு ஆய்வாளர் வைரமணி விசாரணை மேற்கொண்டார். இதன்படி, அயோத்தி, ஆறுமுகம் (காளையார்கோவில் பகுதி), காந்தி (ஆண்டிச்சுரணி), வீரபாண்டி (நெடுவதாவு), திருமூர்த்தி (நெடுவதாவு) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you