அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்த சேர்மன்

263பார்த்தது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வார்டு எண் 6, பெருமாள் கோவில் தெருவில் ரூ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் வார்டு எண் 25, கக்கன் பாக்கம் மேற்கு தெரு, அகிலாண்டபுரத்தில் ரூ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் என மொத்தம் 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம். துரை ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், ஆணையாளர், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி