சிவகங்கை நகராட்சி 21வது வார்டு கவுன்சிலர் ஆயுப் கான், குப்பை வண்டியில் இனி விசில் ஊதக்கூடாது என துப்புரவு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தி, சொந்த செலவில் ஒலிபெருக்கி பொருத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.