சேதமடைந்த அரசு குடியிருப்பு வீடுகள் – ஊழியர்களின் வேதனை

1பார்த்தது
சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் அரசு ஊழியர்களுக்காக 1986, 1991 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட 798 குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. கூரை, ஜன்னல்கள், சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளதால் பல வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், இப்பகுதிகள் விஷ ஜந்துக்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகளின் தஞ்சமாகவும் மாறியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பயன்பாட்டில் உள்ள சேதமடைந்த வீடுகளை அவசரமாக பழுதுபார்த்து பராமரிக்க அரசு ஊழியர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி