சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் 77 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். லாரிகள் சரியான நேரத்தில் வராததாலும், ஈரப்பதம் அதிகம் என்ற காரணத்தாலும் கொள்முதல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மழை பெய்தால் நெல் முளைத்து சேதமடையும் அபாயம் உள்ளதாகவும், போதிய தார்ப்பாய் வசதி இல்லாததால் பாதுகாப்பு குறைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.