300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேதுபதி கால கல்வெட்டுகண்டுபிடிப்பு

0பார்த்தது
300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேதுபதி கால கல்வெட்டுகண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மருதங்கநல்லூரில் உள்ள அழகிய திருவேட்டை அய்யனார் கோயில் கண்மாய்க் கரையில் அமைந்திருக்கும் சூலக்கல்லை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆய்வாளர் உ. விஜயராமு அந்த சூலக்கல்லை ஆய்வு செய்தபோது, அதில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சேதுபதி காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி