சிவகங்கையில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் முன்பாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அணி தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, "நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது", "தமிழக மாணவர்களுக்கு நீட் தேவையில்லை" போன்ற கோஷங்களை எழுப்பினர்.