மழையில் வீடு சுவர் இடிவுகாந்தி வீதியில் உயிர் தப்பிய முதியர்

1பார்த்தது
சிவகங்கை நகரில் கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரால், சிவன் கோவில் மேற்கு தெருவில் சந்திரமௌலீஸ்வரன் என்பவரின் பழமையான வீட்டின் மதில் சுவர் இடிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். மேலும், மின்மாற்றிக்கு அடியில் மண் சரிந்து பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வீட்டிற்கு சீரமைப்பு மற்றும் நஷ்டஈடு வழங்கும்படி அப்பகுதி மக்கள் அரசாங்கத்தையும் வங்கி நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.