சிவகங்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், 70 வயதில் 10% ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், மருத்துவகாப்பீட்டுத் திட்ட குளறுபடிகளை நீக்கி காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் கம்முடேசன் பிடித்ததை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் எம். ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ந. பர்வதராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.