இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, 4.11.2025 முதல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் அடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 11,10,599 வாக்காளர்கள் உள்ளனர், இதில் ஆண்கள் 5,44,035, பெண்கள் 5,66,526, மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனைகள் இருந்தால், 15 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம். அதன் பின், 30 நாட்களுக்குள் சென்னை தலைமை தேர்தல் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். இளைஞர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி