சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள முத்து வடுகநாதர் சமாதி அருகே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வீட்டு மற்றும் வணிகக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாகவும், குப்பைகளை முறையாகப் பிரித்தெடுத்து அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.